போர்டிங் பாஸ், செக் -இன் இல்லாத விமான பயணம்: எதிர்கால மாற்றங்கள்!

சர்வதேச சிவில் விமானியல் நிறுவனம் (ICAO) அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் ஒரு உலகளாவிய டிஜிட்டல் பயண சான்றிதழை அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் மூலம் பாரம்பரிய செக்-இன் மற்றும் போர்டிங் பாஸ்கள் தேவையில்லாமல் போகும். பயணிகள் ஒரு மொபைல்-அடிப்படையிலான ‘ஜர்னி பாஸ்’ மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி விமானங்களில் பயணிக்கலாம். இந்த அமைப்புகள் தானாகவே பயண விவரங்களைப் புதுப்பித்து, பயன்பாட்டின் 15 வினாடிகளுக்குள் பயோமெட்ரிக் தரவுகளை நீக்கிவிடும்.

உலகளாவிய விமானப் பயணத்தில் வரவிருக்கும் பெரும் மாற்றங்கள்.!
விமானப் பயணத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான “போர்டிங் பாஸ்” விரைவில் காலாவதியாகும் என அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறுகின்றனர்.
அனைத்துலக சிவில் விமானியல் நிறுவனம் (ICAO) ஒரு பெரிய கொள்கை மாற்றத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விளைவாக, பாரம்பரிய செக்-இன் முறைகள் மற்றும் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்கள் காலாவதியாகலாம். இதற்குப் பதிலாக, பயோமெட்ரிக் அடையாளம் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் அடிப்படையில் பயணம் மேற்கொள்ளப்படும்.
என்ன மாற்றம் வருகிறது? யார் இதை வழிநடத்துகிறார்கள்?
ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனமான ICAO, விமானப் பயணத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த செக்-இன் நடைமுறைகள் மற்றும் போர்டிங் பாஸ்களை முற்றிலுமாக நீக்க திட்டமிட்டுள்ளது.
UK-யின் ‘தி டைம்ஸ்’ செய்திக்குறிப்பின் படி, ICAO நடைமுறைகள் உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படும். புதிய டிஜிட்டல் நெறிமுறைகளை அடுத்த 2-3 ஆண்டுகளில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது விமான நிலையங்களில் பயணிகளின் நடைமுறைகளை முழுமையாக மாற்றியமைக்கும்!




