எட்டாத.. உயரத்தில்.. தங்கத்தை வைத்தது யாரு..? இன்றைய விலையை பார்ப்போம்..!

சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

சென்னை, ஏப்.18 2025
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் ரூ. 71 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தினசரி ஏற்றமும் இறக்கமுமாக காணப்படும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் ஏற்றத்தின் காரணமாக நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து ரூ. 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று 22 கேரட் கொண்ட ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 8,920 -க்கும் 8 கிராம் கொணட ஒரு சவரன் ரூ. 71,360-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது. அந்தவகையில்,, இன்று கிராம் ரூ. 8945-க்கும் சவரன் ரூ. 71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தை பொருத்தவரை 24 கேரட் கொண்ட ஒரு கிராம் ரூ. 9,758-க்கும் சவரன் ரூ. 78064-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கடந்த சில தினங்களாக கிராம் வெள்ளி ரூ. 110-க்கும் ஒரு கிலோ கொண்ட பார் வெள்ளி ரூ. 110,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது




