
ஹைதராபாத், ஏப்.19 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப் பத்திரிகையில், காங்கிரஸின் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மௌனம் காப்பது ஏன் என பாரதிய ராஷ்ட்ரீய சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ் அளித்த பேட்டியில், “நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயர்கள் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன என கூறியுள்ளார்.

இதனை கண்டித்து ஓர் அறிக்கை கூட ரேவந்த் ரெட்டி விடவில்லை. இது ஏன்? அவரின் மௌனம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மௌனமாக இருப்பது ஏன் என பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி ராமா ராவ் கேள்வியெழுப்பியுள்ளார்.





