அரசியல்தமிழகம்

தமிழகத்தில் இன்றைய முக்கிய செய்திகள்…

சென்னை ஏப் 22 2025

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் மரியாதை நிமித்தமாக சந்திப்பு என தகவல்

எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

******

இன்று ஒரே நாளில் சவரன் ரூ.2200/- அதிகரித்தது!

சூப்பர் ஜெட் வேகத்தில் தங்கம் விலை!

*******”

ஓசூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்தது விமான போக்குவரத்து ஆணையம்

ஓசூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்தது.

அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என வரைவு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*******

நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை.

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை 5 இடங்களாக மாற்றம்.

கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

*****

போறதுண்ணா போங்க… விஜய் உங்களைச் சேர்க்கமாட்டார்…!

நா.த.க.,வினர் வேறு கட்சிக்குப் போவதற்கு பதில் என் தம்பி [விஜய்] கட்சிக்குப் போகட்டும்; அவர் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்ற தைரியத்தில் சொல்கிறேன்.

அண்ணனையே இந்த பாடு படுத்திவிட்டார்கள் என்று நினைத்து அவரும் உங்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்.

பா.ம.க., மாநாட்டிற்கு என்னை அழைத்தால் மேடையில் ஏறிப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: சீமான் பேட்டி

******

அனுமதி கேட்டால் இளையராஜா கொடுப்பார்!

ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்கும் போதும், இசைக்கான உரிமையை இளையராஜா முன்னதாகவே வாங்கிவிடுவார்; ரூ.7 கோடி கொடுத்தவன் பாட்டு ஹிட் ஆகல. எங்க பாட்டு போட்டாதான் கைதட்டல் வருகிறது.

எங்களுக்கு பணத்து ஆசை இல்லை. கொட்டிக்கிடக்கிறது; பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்தால் இளையராஜா இலவசமாக கொடுப்பார். அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் எப்படி?

  • கங்கை அமரன், இசையமைப்பாளர
  • *******

கழிவறைக்கு கக்கன், அண்ணா பெயர்: அண்ணாமலை கண்டனம்

கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிப்பறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் திரு @mkstalin, அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?

உடனடியாக, கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.

******

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

“மாராட்டியத்தில் 3வது மொழியாக இந்தியை திணிக்க அம்மாநில முதலமைச்சர் ஃபட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்து மராத்தி மட்டுமே கட்டாயம் என அறிவித்துள்ளார். மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு ஏற்கிறதா?

NEPயின் படி 3வது மொழியை கட்டாயமாக கற்க வேண்டிய அவசியமில்லை என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தெளிவான உத்தரவை பிறப்பிக்குமா? தமிழ்நாட்டுக்கான ரூ.2152 கோடியை நிறுத்தி வைத்துள்ளது என்ன காரணத்திற்காக?”- மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

*****

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button