ஐபிஎல் வரலாற்றில் முகமது ஷமி நிகழ்த்திய புதிய சாதனை – என்ன தெரியுமா..?

சென்னை ஏப்ரல் 26 2025
ஐபிஎல் வரலாற்றிலேயே மாபெரும் பந்து வீச்சு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் முகமது ஷமி. ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைஅவர் நிகழ்த்தியுள்ளார்

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. அந்த போட்டியில் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் பந்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரரான ஷேக் ரஷீத் முதல் பந்திலேயே அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே முகமது ஷமி வீழ்த்தும் நான்காவது விக்கெட்டாக இது அமைந்தது.

இதற்கு முன் முகமது ஷமி, ஜாக்கஸ் காலிஸ், கே.எல். ராகுல், ஃபில் சால்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே வீழ்த்தியிருக்கிறார். இதற்கு முன் லசித் மலிங்கா, அசோக் திண்டா, பிரவீன் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மூன்று முறை விக்கெட் வீழ்த்தியிருக்கின்றனர். அவர்களது சாதனையை முந்தியிருக்கும் முகமது ஷமி தற்போது நான்கு முறை முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

ஐபிஎல்லில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர்கள்:
- முகமது ஷமி – 4 முறை
- லசித் மலிங்கா – 3 முறை
- அசோக் திண்டா – 3 முறை
- பிரவீன் குமார் – 3 முறை
- புவனேஷ்வர் குமார் – 3 முறை
- உமேஷ் யாதவ் – 3 முறை
- டிரென்ட் போல்ட் – 3 முறை
- டிர்க் நான்ஸ் – 2 முறை
- இர்ஃபான் பதான் – 2 முறை
- ஆல்பி மோர்கெல் – 2 முறை
- ஹர்பஜன் சிங் – 2 முறை
- பாட் கம்மின்ஸ் – 2 முறை
- ஜாகீர் கான் – 2 முறை
- ரவிச்சந்திரன் அஸ்வின் – 2 முறை
- தீபக் சாஹர் – 2 முறை
ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே முகமது ஷமியால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட பேட்டர்கள்:
- ஜாக்கஸ் காலிஸ் (KKR), துபாய்(2014)
- கே.எல். ராகுல் (LSG), மும்பை (2022)
- பில் சால்ட் (KKR), அகமதாபாத் (2023)
- ஷேக் ரஷீத் (CSK), சென்னை (2025)




