இந்தியா
இந்திய குடியரசு துணை தலைவருக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி !

புதுடெல்லி: இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி காரணமாக இன்று அதிகாலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

73 வயதான தன்கருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் அதுகாலை 2 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவமனை இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நராங்க் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டார்.
தற்பொழுது குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




