விராட் கோலியின் வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு? ஹேர் ஸ்டைல் கூட அப்படித்தான் இருக்கு..!

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் காட்டு தீ போல் பரவி வருகின்றன.
சென்னை மே 4 2025:

பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
இயக்குனர் மணிரத்தினத்தின் தக்லைப் திரைப்படத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் பிரபல கிரிக்கெட் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
விராட் கோலிக்கு பிடித்த பாடல்:

விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாக உள்ளார் என தகவல்கள் வெளியாவதற்கு ஓர் வலுவான காரணம் உள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, விராட் கோலி தனக்கு ஒரு பாடல் பிடிக்கும் என்று கூறினார்.
அந்த பாடல் நடிகர் சிம்புவின் 10 தல திரைப்படத்தில் வரும் நீ சிங்கம் தானே என்பது ஆகும். இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நடிகர் சிம்பு நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளும் தொடர்வதாக கூறப்படுகிறது.
தோற்றமும் ஒரே மாதிரி இருக்கு

இதற்கிடையில் நெட்டிசங்கள் விராட் கோலியும் நடிகர் சிம்புவும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கின்றனர் என தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




