
“சில சினிமாக்களுக்கு பதில் நல்ல காரியங்களுக்கு உங்களது பட்ஜெட்டை பயன்படுத்துங்கள்” என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து நடிகை ஜோதிகாவை தாக்குவது போல் அமைந்துள்ளது.
சென்னை மே 6 2025 :

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், ” சில சினிமாக்களுக்கு பதில் உங்களது பட்ஜெட்டை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துங்கள்” என நடிகை கஸ்தூரி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, ” கோவில்களுக்கு செலவழிப்பதை விட நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார்.

இந்த கருத்து, ஜோதிகாவின் படம் ஒன்றிலும் வைக்கப்பட்டது. இதற்கிடையில் நடிகை ஜோதிகாவின் அண்மைக்கால பேச்சுக்கள் ஹிந்து மதத்திற்கு எதிராக இருப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தஞ்சை பெரிய கோயில் குறித்து அவர் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், இது தற்போது வரை தொடர்கிறது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, நடிகை ஜோதிகாவை வம்பு இழுக்கும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார்.
நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து சூர்யா ஜோதிகா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




