
தமிழகம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நிகழ்ந்துள்ள முக்கிய செய்திகளை பார்ப்போம்:
சென்னை மே 9 2025 :

“24 மணிநேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி”
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதியை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வணிகர் தின மாநாட்டில் முதலமைச்சர் அறிவித்தபடி 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டிப்பு.
ஜூன் 4ஆம் தேதியுடன் அனுமதி முடிவடைவதால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை.
10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அனுமதி – தமிழ்நாடு அரசு
******
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

“ஐபிஎல் போட்டி நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும்” – சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல்.
“ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என மிரட்டல்” – பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு இ-மெயில் மூலம் மிரட்டல். போலீசார் தீவிர விசாரணை.
******
12ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும் – அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

துணைத் தேர்வர்கள் மே 14 முதல் மே 29 வரை விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 25 ல் தமிழ், 25ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கு தேர்வு, ஜூன் 26 ஆங்கிலம் மொழி பாடத் தேர்வுகள் நடைபெறுகிறது.

கணிதம், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் ஜூன் 27ல் நடைபெறுகிறது.
*****
ஏசி பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஏசி பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில் ஏசி வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.408 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்.
பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
*****
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் தலைமையில் பேரணி
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பேரணி – முதல்வர் ஸ்டாலின்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து போர் நினைவு சின்னம் வரை நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி
இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது – முதல்வர் ஸ்டாலின்
இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கு நாளை பேரணி நடைபெறுகிறது- முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு
ஆதரவு தெரிவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
*****
தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து.
*****
மீடியா, டிஜிட்டல் தளங்கள், தனிநபர்கள் கவனிக்க… பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

பாதுகாப்பு படையினர் நடத்திய போராட்டங்கள், இயக்கங்கள் குறித்த நேரடி ஒளிபரப்பு அல்லது ரியல் டைம் செய்தி வெளியீடு தவிர்க்கவும்.
இவ்வகையான தகவல் வெளியீடு பாதுகாப்பு பணிகளின் பயன்திறனை பாதிக்க, வீரர்களின் உயிருக்கும் ஆபத்தாக மாறும்.
கார்கில் போர், கந்தஹார் கடத்தல், 26/11 பயங்கரவாத தாக்குதல் போன்ற நிகழ்வுகள் இதற்கான எச்சரிக்கைகள்.
Cable TV சட்டம் 6(1)(p) படி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தி மட்டுமே உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது அனுமதிக்கப்படுகிறது.
மீடியா மற்றும் பொது மக்கள் சீரான பொறுப்புடன், நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு செயல்பட வேண்டுகிறோம்.
*****
ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.

பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடல்.
இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடவும் உத்தரவு.
****
10 நாடுகளுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
அமெரிக்கா, கத்தார், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சவுதி, ஈரான், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுடன் பேச்சு
பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில், இந்தியா முன்னெடுத்துவரும் பதில் நடவடிக்கைகள் குறித்து பேசியதாக தகவல்.
*****




