
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் பதிலடி சிறப்பாக இருந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மே 14 2025 :

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் போர் சிறப்பாக இருந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உதகையில் தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று முன்தினம் உதகைக்கு வருகை புரிந்தார்.
இந்நிலையில் இன்று காலை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்தூர் ஆப்பரேஷன் மிக சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் பேசி அவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தேன், 2019 மக்களவைத் தேர்தலின் போது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என உறுதி அளித்தேன் என பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து கருத்து தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார் என அவர் தெரிவித்தார். மேலும் கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.