அரசியல்இந்தியா

சர்வதேச மற்றும் தேசிய அளவில் இன்றைய முக்கிய செய்திகள்…

புதுடெல்லி ஏப் 23 2023

பஹல்காமில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள்.

பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல்.

மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்வு.

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

காவலர் கட்டுப்பாட்டு அறை பகுதியில் வைக்கப்பட்ட 29 பேரின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

*****

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு
படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத
தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டை தீவிரம்.

பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை.

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு – ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல்.

*****

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலைக் கண்டித்து வங்கதேசம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனங்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

*****

தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை.

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி ஆலோசனை.

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.

டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.

*****

பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்புகள் வெளியாகிறது

*****

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள்:

*****

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி.

உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.

******

ஜம்மு-பெஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு:

*****

பஹல்காம் ஜிஹாதிகள் தாக்குதல் : ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கண்டனம்

*****

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button