நியூசிலாந்தில் 7.0 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் இன்று காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியே தஞ்சம் அடைந்தனர்.

நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் இந்திய நேரப்படி காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்பொழுது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது வரை எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.




