
துருக்கியின் தலையில் இடியை இறக்கிய Ajio – Myntra.. என்னாச்சு? பார்ப்போம்…!
புதுடெல்லி மே 18 2025:

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் துருக்கியை நம் நாட்டு மக்கள் புறக்கணித்து வருகின்றனர். பல்வேறு வர்த்தக அமைப்புகள் துருக்கி உடனான வர்த்தகத்தை ரத்து செய்துள்ளன. அந்த வகையில் தான் நம் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானியின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Ajio வும்முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடும் கொண்ட துருக்கியை புறக்கணிக்க நம் நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர். துருக்கிக்கு சுற்றுலா செல்வதை நம் நாட்டு மக்கள் தவிர்த்து வருகின்றனர். முன்பதிவுகளை கேன்சல் செய்து வருகின்றனர்.
அதேபோல் பல்வேறு வர்த்தகஅமைப்புகள் துருக்கி பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்று அறிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் Ajio என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் செயல்பட்டு வருகிறது.

இந்த இணையதளம் வழியாக துருக்கி நாட்டின் ஆடை பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது நம் நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் துருக்கி நாட்டின் பிராண்டுகளை சேர்ந்த ஆடைகளை விற்பனை செய்யமாட்டோம் என்று Ajio அறிவித்துள்ளது. அதன்படி துருக்கி பிராண்டுகளான Koton, LC Waikiki, Mavi உள்ளிட்ட பிராண்டுகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாகஅறிவித்துள்ளது.


அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான Myntra-வும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துருக்கி பிராண்டான Trendyol என்பதை இந்தியாவில் விற்பனை செய்யும் உரிமத்தை மிந்திரா பெற்றிருந்த நிலையில் அதனை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. Trendyol என்பது பெண்களுக்கான மேற்கத்திய கலாசார உடைகளுக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும். இந்த நடவடிக்கைகள் என்பது துருக்கி நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகம் உள்ளிட்டவை துருக்கி நாட்டின் கல்வி நிறுவனங்களுடன் மேற்கொண்டு இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன.அதேபோல் புனே வியாபாரிகள் சங்கம் துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை ரத்து செய்துள்ளன. துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மார்பிள் கல் தொடர்பான வர்த்தகத்தை கைவிடுவதாக உதய்ப்பூர் மார்பிள் புராசசர்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதவிர சிஜேசி எனும் அகில இந்திய ரத்தினம் மற்றும் நகைக்கான உள்நாட்டு கவுன்சில் சார்பில் துருக்கி, அஜர்பைஜான் உடனான வர்த்தகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோடை காலத்தையொட்டி துருக்கிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்த மக்கள் அதனை கேன்சல் செய்து வருகின்றனர்.




