தெலுங்கானாவில், உலக அழகிப் போட்டிக்காக வந்துள்ள பெண்களின் கால்களை, உள்ளூர் பெண்கள் கழுவியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், விருந்தோம்பல் என தெலுங்கானா அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஹைதராபாத் மே 16 2025

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ், ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 31ம் தேதி, ‘மிஸ் வேர்ல்டு’ எனப்படும் உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, 100 க்கும் மேற்பட்ட அழகிகள், தெலுங்கானா வந்துள்ளனர். அவர்களை மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அதன்படி, ‘யுனெஸ்கோ’வால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பலம்பேட்டில் இருக்கும் ருத்ரேஸ்வரா எனப்படும் ராமப்பா கோவிலுக்கு, அழகிகள் சென்றனர்.
அங்கு, அவர்களை வரிசையாக அமர வைத்து, அவர்களின் கால்களை உள்ளூர் பெண்கள், தண்ணீர் ஊற்றி கழுவி விட்டனர். அதிலும் சிலரது கால்களை துண்டால் உள்ளூர் பெண்கள் துடைத்தனர்.
இந்த செயலுக்கு, தெலுங்கானா எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கு, தெலுங்கானா காங்., அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘விருந்தினர்களை கடவுளாக பாவிக்கும் கொள்கையின்படி, நாம் பின்பற்றும் பாரம்பரிய நடைமுறை தான் இது.
‘இதன் வாயிலாக, நம் சர்வதேச விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த மரியாதையை வழங்கி இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளது.
இருப்பினும் மிஸ் வேர்ல்ட் அழகிகளுக்கு பாதபூஜை செய்வது போல் அரங்கேறிய இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
கோயில்கள்
சினிமா
உள்ளூர் செய்திகள்
Follow us

Advertisement
/செய்திகள்/இந்தியா/அழகிகள் காலை கழுவிய பெண்கள்: தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்
அழகிகள் காலை கழுவிய பெண்கள்: தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்
ADDED : மே 16, 2025 06:51 AM

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற–அ+அ
ஹைதராபாத்: தெலுங்கானாவில், உலக அழகிப் போட்டிக்காக வந்துள்ள பெண்களின் கால்களை, உள்ளூர் பெண்கள் கழுவியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், விருந்தோம்பல் என தெலுங்கானா அரசு விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
javascript:false
javascript:false
javascript:false
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 31ம் தேதி, ‘மிஸ் வேர்ல்டு’ எனப்படும் உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அழகிகள், தெலுங்கானா வந்துள்ளனர். அவர்களை மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
கடும் கண்டனம்
அதன்படி, ‘யுனெஸ்கோ’வால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பலம்பேட்டில் இருக்கும் ருத்ரேஸ்வரா எனப்படும் ராமப்பா கோவிலுக்கு, அழகிகள் சென்றனர்.
இதையும் படிங்க

முடக்கிய நகரமைப்பு குழு மூலம் மும்முர வசூல்!
அங்கு, அவர்களை வரிசையாக அமர வைத்து, அவர்களின் கால்களை உள்ளூர் பெண்கள், தண்ணீர் ஊற்றி கழுவி விட்டனர். அதிலும் சிலரது கால்களை துண்டால் உள்ளூர் பெண்கள் துடைத்தனர்.
இந்த செயலுக்கு, தெலுங்கானா எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மரியாதை