என்னென்ன சொல்றாரு பாருங்க.. நம்ம சந்திரபாபு நாய்டு !!

மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மட்டும்தான். தாய்மொழிக்கு எப்போதும் முதலிடம். ஹிந்தி நம் தேசிய மொழி, ஆங்கிலம் உலக மொழி. தேவைப்பட்டா எத்தனை மொழியும் கத்துக்கலாம். அதனால மொழியை வச்சு அரசியல் பண்ண வேண்டிய அவசியமே இல்லைன்னு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லியிருக்காரு.

ஆந்திர சட்டப்பேரவையோட பட்ஜெட் கூட்டத்தொடர் அமராவதியில நடந்துட்டு இருக்கு. இதுல முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, இன்னைக்கு நல்ல வேலைக்கு ஆங்கிலம் முக்கியம்னு ஆகிடுச்சு. மொழி நமக்கு அறிவை வளர்க்குறது. ஒருத்தருக்கொருத்தர் பேசி தெரிஞ்சுக்கவும் மொழி உதவுது. ஆனா, தாய்மொழி ரொம்ப முக்கியம். எந்த மொழியையும் தாழ்த்தி பேசக்கூடாது. நமக்கு தெலுங்கு தாய்மொழி. ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி. நம்ம நாட்டு மக்கள், படிப்புக்கோ, வேலைக்கோ ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா இப்படி பல நாட்டுக்கும் போறாங்க. அந்தந்த நாட்டு மொழிய கத்துக்கிட்டா அங்க போய் அவங்களோட பேசி பழகறது சுலபம். வாழ்க்கைக்காக எத்தனை மொழி வேணாலும் கத்துக்கலாம். ஆனா, தாய்மொழிய மறக்கக்கூடாது. ஹிந்தி கத்துக்கிட்டா டெல்லில எல்லார்கிட்டயும் பேசலாம். அதனால, மொழிய வச்சு அரசியல் பண்றது தேவையில்லைன்னு சந்திரபாபு நாயுடு சொல்றாரு..!




