அரசியல்தமிழகம்

பரந்தூர் விவசாயிகளை பங்கு தாரராக மாற்றுங்கள் – டாக்டர் ராமதாஸ்…!

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்  கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.

மாமல்லபுரம் மே 12 2025 :

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ராமதாஸ் இவ்வாறு பேசினார்:

, “பலர் கட்சியில் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும். இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன். சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என எதுவும் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது. உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல”

“பாமக தனியாகப் போட்டியிட்டபோது 4 MLAக்களை பெற்றது. ஆனால் தற்போது கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். நம்முடைய ஆட்களே நமக்கு ஓட்டுப்போடவில்லை. எனக்கு வயதாகிவிட்டது என என்னை ஏமாற்றப்பார்க்காதீர்கள்; பாமகவில் சிலர் உழைக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், அதைநான் பார்த்துக் கொள்கிறேன்”

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்; ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையில் தமிழருக்கு 75% இட ஒதுக்கீடு என கூறியது என்ன ஆனது?

பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் கொடுத்த விவசாயிகளை பங்குதாரராக மாற்றுங்கள்; அதானியும், அம்பானியும் தான் பங்குதாரராக இருக்க வேண்டுமா? என்றும் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பாமக கொடி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button