
புதுச்சேரி ஏப் 23 2025
புதுச்சேரி மாநில பொது நல அமைப்புகள் மற்றும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பாக இன்று மாலை 6:30 மணி அளவில் ராஜா திரையரங்கம் அருகில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவர் G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள் தலைமையிலும் மற்றும் பொதுநல அமைப்பு தலைவர்கள் தலைமையிலும் இது நடை பெற்றது.

நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகளின் தலைவர்களும் இயக்கத் தோழர்களும் மேலும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகளும், பிரமுகர்களும், இளைஞர்களும் என பலர் கலந்துகொண்டு தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த நமது சொந்தங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.




