லைஃப் ஸ்டைல்

கணவனை ஏமாற்றி கள்ளக்காதல் செய்யும் பெண்கள்- ஒரு வேர்ல்ட் ரிப்போர்ட்

இல்லற பந்தம் என்பது ரத்த சொந்தங்களை காட்டிலும் ஒரு மனிதனுக்கு கடைசி வரை துணையாய் வரக் கூடியது. இன்று மாறிவரும் வாழ்க்கை முறையாலும், துணைகளோடு செலவழிக்க நேரம் இன்மையாலும் அந்த உறவு மதில் மேல் பூனை மாதிரி அவன் தோள் மேல் நின்று கொண்டிருக்கிறது. அதனால் திருமணம் மீறிய உறவுகள் தற்பொழுது வெகுவாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த வரம்பு மீறிய உறவு பரவிக் கிடக்கின்றது.

சமீபத்தில் பிரபல ஆணுறைத் தயாரிப்பு நிறுவனம் பல்வேறு மக்களிடையே நடத்திய ஆய்வில் எந்த நாட்டில் திருமணமான பெண்கள் அதிகளவில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர் என்ற பட்டியலை தொகுத்துள்ளது. அந்த கருத்துக்கணிப்பின் படி நைஜீரிய நாட்டு திருமணமான ஆண்களின் நிலைதான் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

நைஜீரியா
அதிர்ச்சியளிக்கும் விதமாக நைஜீரிய நாட்டு பெண்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். நைஜீரியப் பெண்களில் 62% பேர் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். நைஜீரிய நாட்டில் ஏற்படும் 80% சதவீத விவாகரத்துக்கு கள்ளக்காதலே காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

தாய்லாந்து
தாய்லாந்தில் வசிக்கும் 59% பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளை விட தாய்லாந்தில் சமூக விதிகள் மிகவும் தளர்வானதாக உள்ளது. பல கணவர்கள் தங்கள் மனைவிகள் விபச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள். தாய்லாந்து பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அதிகளவில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். இதிலும் தாய்லாந்துதான் முதலிடத்தில் உள்ளது.

பிரிட்டன்
கிட்டதட்ட 42% பெண்கள் துரோகம் மற்றும் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதால் இந்த பட்டியலில் பிரிட்டன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வளர்ந்த நாடுகளில் பெண்கள் ஏமாற்றுவது பிரிட்டனில் மிகவும் அதிகமாக உள்ளது.

மலேசியா
மலேசிய பெண்களில் 33% பேர் திருமணம் மீறிய உறவில் இருப்பதாக அறியப்படுகிறது. குறிப்பாக மலேசியப் பெண்களில் 39% பேர் தங்கள் திருமண உறுதிமொழியை ஏமாற்றுவதாக அறியப்படுகிறது. அதேசமயம் மலேசிய ஆண்களில் பெரும்பாலானோர் சராசரியாக 3 பாலியல் துணையைக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ரஷ்யா
ரஷ்ய பெண்களில் 33% பேர் ஏமாற்றுபவர்கள் என்று அறியப்படுகிறார்கள். சுவாரஸ்யமாக, ரஷ்யாவில் கள்ள உறவில் ஈடுபடுவர் மீது குற்றம் சாட்டப்படுவதில்லை. கள்ள உறவைத் தூண்டும் நபர் மீதுதான் குற்றம் சுமத்தப்படுகிறது. அது பெண்களாக இருந்தாலும் குற்றம்தான். இது அங்கு ‘நூற்றாண்டு பழமையான பாரம்பரியம்’ என்று அழைக்கப்டுகிறது

சிங்கப்பூர்
சிங்கப்பூரில் 19% பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மற்ற எந்த நாடுகளையும் விட சிங்கப்பூர் ஆண்கள் அதிகளவு திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். இங்கு பெரும்பாலான ஆண்களுக்கு 10-க்கும் மேற்பட்ட பாலியல் துணைகள் இருக்கிறார்கள். இங்கு பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபட இதுவும் ஒரு காரணமாகும்.

பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் 16.3% பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் பிரான்ஸில் 22% ஆண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் இந்த நாடு பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவில் திருமணமான பெண்களில் 14% பேர் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. திருமணமான ஆண்களில் 54% பேர் தங்கள் துணையின் திருமணத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் பற்றி தெரியவில்லை என்பது இன்னும் மோசமானது.

இதையும் படிங்க.. காதலுக்கு அழகு முக்கியம் இல்லைன்னு நினைக்கிற ராசிக்காரங்க யார் யார்னு தெரியணுமா ? இதை படிங்க முதல்ல

இந்த டாப் வரிசையில் நமது நாடு இல்லாதது சிறிது ஆறுதல் அளித்தாலும், இங்கு தவறுகள் நடக்கவில்லையென்று ஒரேயடியாய் சொல்லிவிட முடியாது. எனவே இல்லற வாழ்வின் மகத்துவத்தை புரிந்து கொண்டு, அதற்கு மதிப்பளித்து சுய ஒழுக்கத்துடன் நடக்க முயற்சிப்போம். முடியாத சூழலில் பிரிந்து வாழ்வது கூட நல்ல முடிவுதான். ஒரே அறையில் வசித்துக் கொண்டு இப்படி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு வாழ்வது நல்ல மனிதர்களுக்கு எப்போதும் அழகல்ல !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button