வணிகம்

சீனியர் சிட்டிசன்களுக்கு  8 சதவீத வட்டி – ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு புது ஸ்கீம்…!

பிரபல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.

சென்னை, மே 10 2025: 

இந்தியாவில் பிக்சட் டெபாசிட் முதலீடு பாதுகாப்பான மற்றும் எதிர்கால சேமிப்புக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் சாதாரண குடிமக்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் இந்த முதலீட்டு திட்டத்தை விரும்புகின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த பிறகு, மூத்த குடிமக்களுக்கு பல வங்கிகள், சிறு நிதி, பொது மற்றும் தனியார் வங்கிகளும் 8% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இது, வட்டி வருமானத்தில் நம்பிக்கை வைக்கும் மூத்த குடிமக்களுக்கு நன்மையாகும்.

எந்தெந்த வங்கிகளில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். சிறிய நிதி வங்கிகள், அதிக வட்டி விகிதங்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன

சிறிய நிதி வங்கிகள் (Small Finance Banks)

  • நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank): 18 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்கள் 2 நாட்கள் வரையிலான முதலீட்டு திட்டத்திற்கு 9% வட்டி வழங்குகிறது.
  • சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank): 5 ஆண்டுகள் காலத்திற்கு 9.10% வட்டி வழங்குகிறது.
  • உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank): 2 முதல் 3 ஆண்டுகள் மற்றும் 1500 நாட்கள் வரை காலத்திற்கு 9.10% வட்டி வழங்குகிறது.
  • உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank): 1001 நாட்கள் காலத்திற்கு 9.10% வட்டி வழங்குகிறது.
  • ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank): 2 முதல் 3 ஆண்டுகள் வரை, 8.75% வட்டி வழங்குகிறது.

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகளும் போட்டி வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அவற்றில்

  • ஆர்பிஎல் வங்கி : 500 நாட்கள் காலத்திற்கு 8.25% வட்டி வழங்குகிறது.
  • டிசிபி வங்கி : 15 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரையிலான காலத்திற்கு 8.50% வட்டி வழங்குகிறது.
  • இண்டஸ்இண்ட் வங்கி: 15 முதல் 16 மாதங்கள் வரையிலான காலத்திற்கு 8.25% வட்டி வழங்குகிறது.
  • பந்தன் வங்கி: 1 ஆண்டு காலத்திற்கு 8.55% வட்டி வழங்குகிறது.
  • எஸ்பிஎம் வங்கி இந்தியா: 18 மாதங்களுக்கு மேலான காலத்திற்கு 8.55% வட்டி வழங்குகிறது.

பொதுத்துறை வங்கிகள்

  • சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா – 3333 நாட்கள் காலவரையறைக்கு 8% வட்டி விகிதங்களை வழங்குகிறது.
  • பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா- 366 நாட்கள் காலவரையறைக்கு 7.95 சதவீதம் வட்டி வழங்குகிறது.

1 வருட எஃப்டி-க்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம்

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- 7.60 சதவீதம்
  • பாங்க் ஆஃப் இந்தியா- 7.55 சதவீதம்
  • பரோடா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா- 7.35 சதவீதம் வழங்குகிறது.

இந்த வட்டி விகிதங்கள், மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. வட்டி விகிதங்கள் குறையும் முன், இவ்வருமான வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button