வணிகம்

தினமும் உயரும் தங்கம் விலை: நுகர்வோர் சோகம்.. முதலீட்டாளர்கள் உற்சாகம்!!

சென்னை: சர்வதேசப் பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை உயர்வை நோக்கி மட்டுமே நகர்கிறது.

நேற்று தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.105 உயர்ந்து, ரூ.8,340-க்கு விற்பனையானது. பவுன் விலையில் ரூ.840 உயர்வு ஏற்பட்டுள்ளதால், தற்போது பவுன் ரூ.66,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளமை முதலீட்டாளர்களிடையே கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

24 காரட் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

உயர்தர 24 காரட் சுத்த தங்கம் ரூ.72,664-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலையும் லேசாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-ல் இருந்து ரூ.3 உயர்ந்து, ரூ.114-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தற்போது ரூ.1,14,000 ஆக நிலைக்கிறது.

இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்துள்ளோர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரம் நகை வாங்குவோர் மத்தியில் கவலையே தென்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button