இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. சரிவை கண்ட தங்கம் விலை !

சென்னை: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று சிறிது சரிவை கண்டுள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 8020 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பவுன் ரூ. 64,160 க்கான விலையில் விற்பனையாகி வருகிறது.

இதன் படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து, பவுனுக்கு ரூ. 360 வரை சரிந்து உள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ. 8749 மற்றும் பவுனுக்கு ரூ. 69,992 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை (மார்ச் 5, 2025) கிராம் வெள்ளி ரூ. 107 விற்பனையாகியிருந்த நிலையில், இன்று வெள்ளியின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி, கிராம் வெள்ளி ரூ. 108 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 1,00,000 என விற்பனையாகி வருகிறது. இதனால், வெள்ளியின் விலை கிலோக்கு ரூ. 1000 வரை உயர்வை காண்பதாக குறிப்பிடத்தக்கது.




