தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு போல செயல்படுகிறது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

சென்னை: சென்னை மாநகர காவல்துறையின் செயல்திறனை புகழ்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டுகள் தெரிவித்தார். அண்மையில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையை அவர் வரவேற்றார்.

அவரின் அறிக்கையில், “நமது காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு போலவே செயல்பட்டு, குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியிருக்கிறது. இந்த செயல் மக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறது. காவல் துறையின் துரித நடவடிக்கையால் சென்னை நகரத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், தமிழகம் முழுவதும் காவல்துறை இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறையின் அனைத்து முயற்சிகளுக்கும் தேமுதிக முழு ஆதரவு அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.



