லைஃப் ஸ்டைல்
ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைக்கணும்னா.. இந்த பழங்களை சாப்பிடுங்க !

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உலகம் அவர்களின் குழந்தையை மையப்படுத்தியதாக மாறிவிடும். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். எனவே தாய்மார்கள் தங்கள் உணவில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக எளிதில் கிடைக்கக்கூடிய பழங்கள் பல சத்துக்களை கொண்டிருந்தாலும் பெண்கள் அவற்றை பெரும்பாலும் புறக்கணிக்கின்றனர்.

தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கவும், தாய்மார்களுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கவும் பழங்கள் உதவுகின்றன. ஊட்டச்சத்து நிபுணர் நித்யா, தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சில பழங்களை பரிந்துரைக்கிறார்.
- ஸ்ட்ராபெர்ரி: அதிகப்படியான விட்டமின் சி நிறைந்த ஸ்ட்ராபெர்ரி உடலின் நீர்ச்சத்து அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
- சப்போட்டா: குழந்தை பராமரிப்பில் ஏற்படும் சோர்வை போக்க சப்போட்டாவில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.
- ப்ளூபெர்ரி: அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ப்ளூபெர்ரி தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் சென்றடைகிறது.
- வாழைப்பழம்: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வை போக்க வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.
- பச்சை பப்பாளி: பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு, விட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய சத்துக்களை அம்மாக்களுக்கு வழங்குகிறது.
- பரங்கிக்காய்: தாய்ப்பாலில் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்திருக்க பரங்கிக்காய் சாப்பிட வேண்டியது அவசியம்.
- அவோகேடா: ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அவோகேடா, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.




