இந்த ராசிக்கு இன்று மொத்த சம்பள பாக்கியும் கைக்கு வர போகுதாம் !! @ராசிபலன்

வேத சாஸ்திரங்களில் ஜோதிட சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட ராசிகளுக்கு இடம் பெயர்கின்றன. இவற்றின் இடப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினர் மீதும் சுப அசுப பலன்களை ஏற்படுத்துகின்றன. இதனால் சில ராசியினர் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய பலன் மற்றும் அதிர்ஷ்டங்களை இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries):
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் லாபம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம் (Taurus):
அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு காதல் கண்சிமிட்டும். விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். தாங்கள் விரும்பிய துறையில் மிளிருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில்லாதவர் விரும்பிய வேலையில் அமர்வர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
மிதுனம் (Gemini):
இன்று திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை பக்தியுடன் கும்பிடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம் (Cancer):
உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுங்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். மனம் அமைதியைத் தேடும். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம் (Leo):
மனைவி மக்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வதால் நிம்மதி அடைவீர்கள். வேலைத் திறமையால் உற்பத்தியை அதிகரிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தந்தையை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, சாம்பல், வெள்ளை
கன்னி (Virgo):
நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம் (Libra):
‘என்னடா வாழ்க்கை’ என்று மனச்சோர்வு அடைவீர்கள். நன்றி மறந்த மனிதர்கள் மீது கோபப்படுவீர்கள். வீட்டில் நகைச்சுவையாகப் பேசுவதை நிறுத்துங்கள். அது குதர்க்கத்தில் கொண்டுபோய்விடும். திட்டமிட்டு காரியம் செய்யுங்கள். நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் கடனை அடைக்க முடியாமல் கவலைப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை
விருச்சிகம் (Scorpio):
செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். ஷேர் மார்க்கெட் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள். புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும். வியாபாரம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். கடினமான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். புதிதாக ஸ்கூட்டி வாங்குவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை பொறுப்பாக வாங்கிப் போடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்
தனுசு (Sagittarius):
குடும்பத்துடன் குதூகலமாக வெளியூர்ப் பயணம் செய்வீர்கள். புதிய ஆடை அணிமணிகளை வாங்கி குஷிப்படுத்துவீர்கள். உங்களிடம் போட்டி போட நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். தொழிலில் முன்னேற்றம் அடைந்து உறவினர்களை வியக்க வைப்பீர்கள். நயவஞ்சக நட்புகள் உங்களை விட்டு விலகுவதால் சந்தோஷம் அடைவீர்கள். பந்தயங்களில் லாபம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு
மகரம் (Capricorn):
உங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். பணத் தேவைக்காக கடன் வாங்க தயங்க மாட்டீர்கள். சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல இடம் அமையும். கையில் இருக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கிடைக்கும் லாபத்தில் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு
கும்பம் (Aquarius):
விடாப்பிடியாக இருந்து திட்டமிட்டவற்றைச் சாதிப்பீர்கள். எனவே பாராட்டுகளுக்கும் ஆதாயங்களுக்கும் குறைவிருக்காது. சிறு தடைகளைச் சமாளித்துவிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
மீனம் (Pisces):
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பய


