துவங்கியது தமிழக பட்ஜெட்- 2025-26/ எதிர்பார்ப்புகள் பூர்தியாகுமா ?

சென்னை: 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய துவங்கினார். இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் சர்வதேச அளவில் தமிழர்கள் தடம் பதிக்கிறார்கள் என்று துவக்க உரையில் பேச்சு.
தமிழக அரசின் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்ய துவங்கினார். இது, நிதி அமைச்சராக அவர் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இன்று நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், பட்ஜெட்மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடி வெடுக்கப்படும்.

இன்றுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத் துறை நேற்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது. நிதியமைச்சர் பேச துவங்கும்போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட் மற்றும் நாளை தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய நகராட்சி நிர்வாகத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இன்னும் படிங்க.. தமிழக பட்ஜெட் இலச்சினையில் தேசிய குறியீடு அகற்றம்- பாஜக தலைவர்கள் கொந்தளிப்பு
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




