வணிகம்

வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம் விலை!

தங்கம் விலை இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து 7,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7,610 ரூபாயாகவும், சவரனுக்கு 60 ஆயிரத்து 880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து 7,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 960 ரூபாய் உயர்ந்து 61 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button