தமிழகம்

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட் !

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, தமிழக அரசு பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு அன்றைய தினத்திற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விதமான விடுப்புகளும் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத அனைத்து ஊழியர்களின் விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அனைத்து துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button