அரசியல்தமிழகம்

முன்னாள் மாநிலத்தலைவருக்கு புதிய பொறுப்பு… ஆனந்தத்தில் அண்ணாமலை…

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.

சென்னையில் நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரன் அதிகாரபூர்வமாக கட்சி தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். எனவே தற்போது அண்ணாமலைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எல்.முருகன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், சரத்குமார், கராத்தே சீனிவாசன் உள்ளிட்டோரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button