ஆன்மீகம்இந்தியாஉலகம்

ஹிங்குலாஜ் செந்தூர மகா சக்தி அம்மன் கோவில்  விடுவிப்பு…! விடுதலையை நோக்கி பலுசிஸ்தான் மக்கள்…!

புதுடெல்லி மே 9 2025 :

“ஹிங்குலாஜ் விடுபட்டது” :

வரலாற்றில் இடம்பெறக்கூடிய மிக முக்கியமான சம்பவம் எல்லாம் நம் கண் முன்னே நடந்துக் கொண்டிருக்கிறது. என்ன ஒன்று நம்மில் பலரும் இதை உணர்வதில்லை அவ்வளவே விஷயம்.

ஆண்டாண்டு காலமாக போராடிக்கொண்டிருந்த பலூசிஸ்தான் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது.

முறைப்படி அறிவிக்க வேண்டியது தான் பாக்கி.

அந்த பக்கிகளுக்கு நம் போர் தந்திரம் புரியவில்லை….. ஏதடா இத்தனை பெரிய தேசம் இத்தனை நாட்கள் முன்னேற்பாடுகள் செய்துவிட்டு அவர்கள் எல்லையை தாண்டிடாமல் அடித்துவிட்டு …. போதும் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார்களே என்கிற முன் யோசனை வேண்டாம்….மூளை இல்லாத பயல்கள்…

போதாக்குறைக்கு பொதுவெளியில் அனைவரும் பார்க்க தீவிரவாதிகளுக்கு ராஜ மரியாதையுடன் சவ அடக்கம் செய்திருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் பாணியை நன்கு கவனித்து இருந்தாலேயே பலதையும் நன்கு புரிந்து கொண்டு இருக்க முடியும்.

7 ஆம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகை பார்க்க அறிவுறுத்தி விட்டு அதிகாலை நேரத்தில் எல்லை தாண்டாமல்…. இருந்த இடத்தில் இருந்தே தீவிரவாத முகாம்களை அடித்து தொம்சம் செய்து இருக்கிறார் என்றால்…. எத்தனை தூரம் தரவுகளை எல்லாம் சேகரித்திருக்க வேண்டும் என யோசித்திருக்க வேண்டாமா….. பத்தும் பத்தாதற்கு தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது இடங்களில் இரண்டு இடங்கள் முழுக்க முழுக்க பாகிஸ்தானிய பகுதி.

இந்த இடத்திலாவது உஷாராகி இருக்க வேண்டும் அவர்கள்.

ஏனெனில்…. சாம்பிள் பார்க்க இந்த இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தி விட்டு நம்மவர்கள் காத்திருந்தார்கள். பாகிஸ்தான் என்ன செய்கிறது….. உலகம் என்ன சொல்கிறது என்று ஆழம் பார்க்க காத்திருந்தார்கள்.

இந்த இரண்டு இடங்களிலும் சிவிலியன்கள் இல்லை… ராணுவத்தினர் இல்லை… அப்படி என்றால் இவர்களை என்னவாக.. யாராக அடையாளப் படுத்தப் போகிறது பாகிஸ்தான் என காத்திருந்தார்கள்.

மொத்த விஷயமும் இதில் தான் தங்கியிருந்த நிலையில்…… அவர்கள் கொஞ்சம் யோசிக்காமல் தீவிரவாதிகளின் உடல்களுக்கே அரசு மரியாதை கொடுத்து அட்டகாசமாக வந்து மாட்டியிருந்தனர்.

உலகின் பல நாடுகளில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி அதிகாரிகளுக்கு தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஒத்துழைப்பு கோரப்பட்டது.ஒரு நாடே தீவிரவாதிகளை உற்பத்தி செய்து வளர்த்து விடுகிறது என்பதை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள்.உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இருந்து முதல் கண்டனக் குரல் காட்டமாக வெளிவந்தது. இப்போதாவது முழித்து கொண்டு இருக்க வேண்டும் அவர்கள்.

கண்டு கொள்ள வில்லை பாகிஸ்தான். ராணுவ தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஆயத்தமானார் ஷெரிப். அவர்கள் என்ன ஒன்பது இடங்களை தேர்வு செய்வது நாம் 15 இடங்களில் அட்டகாசமாக தாக்குதல் நடத்தலாம்… அவர்களை கலங்கடிக்கலாம் என சொல்லி விட்டு தாக்குதல் ஏற்பாடுகளை கவனித்தார்கள் போலிருக்கிறது.

ஏற்பாடுகளை செய்தார் போலவே தாக்குதலும் நடத்தினார்கள். எங்கெல்லாம்…… அமிர்தசரஸ் பொற்கோயில், வைஷ்ணவி தேவி ஆலயம் முதற்கொண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் வரை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்த…. ஒன்று கூட எல்லை தாண்டி கீழே இறங்கவில்லை. நடுவானிலேயே வைத்து துல்லியமாக அடித்திருக்கிறார்கள் நம்மவர்கள்.

இம்முறை பதில் தாக்குதலுக்கு காத்திருக்கவில்லை இறங்கி அடித்து இருக்கிறார்கள். நேற்று ஊதிய சங்கு ஊதிய படியே தான் இருந்தது பாகிஸ்தானில்.

பொழுது போகட்டும் இரவில் விமானத்தில் இருந்து தாக்குதல் நடத்தலாம் என கருவிக்கொண்டு காத்திருந்தார்கள் போலிருக்கிறது. பத்து மணி வாக்கில் அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் தயாரிப்பு F16 தூக்கி கொண்டு வந்திருக்கிறார்கள் தாக்குவதற்கு…… கூடவே சீன தயாரிப்பு JF 17 னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வர மூன்று சுலபமாக தட்டி தூக்கி வீழ்த்தி விமானியையும் உயிருடன் பிடித்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஆட்டம் சூடுபிடித்தது.

இந்தியா தனது வான் எல்லையை மூடிவிட்டு, விடாமல் ஏவுகணை விட்டு பாகிஸ்தானை கதற அடித்து இருக்கிறார்கள். சீன வான் பாதுகாப்பு சாதனங்களை மதிய வேளையிலேயே சிதறடித்திருந்தவர்களுக்கு இது வெகு சுலபமான ஒன்றாக இருந்தது.

இந்த இடத்தில் தான் யாருமே எதிர்பாராத வண்ணம் இந்திய கடற்படை உள்ளே வந்தது.கராச்சி துறைமுகத்தை அடித்து தொம்சம் செய்து இருக்கிறார்கள்.

அதற்காக தான் ஆழம் பார்க்க முன்தினம் இரண்டு பாகிஸ்தானிய பகுதியில் தாக்குதல் நடத்தி எதிர்வினை என்ன பார்த்து வைத்து கொண்டார்கள்.இம்முறை நேரிடையாக பாகிஸ்தானிய துறைமுகத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

இதுவரையில் நடந்த இந்திய ராணுவத்தினரின் தாக்குதலில் தீவிரவாத அமைப்புகள் மற்றும் ராணுவ நிலைப்பாடுகள் என இருக்க இதில் ஏன் துறைமுகம் வந்தது என்கிற கேள்வி எழுகிறது அல்லவா… தவிர நம்மில் பலருமே துறைமுக தாக்குதலை அத்தனை சுலபத்தில் ஏற்கவில்லை….. ஏதோ கதை சொல்கிறார்கள் போலிருக்கிறது என்றே நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் தாக்குதல் சம்பவம் உண்மை. சீன கைவசம் உள்ள குவாடர் துறைமுகம் குறித்து தகவல் இல்லை.

ஆக பாகிஸ்தானிய கராச்சி துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

ஏற்றுமதி இறக்குமதி போச்சு.

ஆச்சா….
பலூசிஸ்தான் பகுதியில் நமது இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த ஆரம்பித்ததும் அவர்களுக்கு தங்கள் பங்கிற்கு செயலில் இறங்கி விட்டனர். 12 பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற வாகனத்தை வெடி வைத்து தகர்த்தவர்கள்… தங்கள் மாகாண தலைநகர் குவெட்டாவை கைப்பற்றி இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இது இன்றுள்ள பாகிஸ்தானிய நிலப்பரப்பில் சுமார் 45% சதவீத நிலப்பரப்பை அது கொண்டிருப்பதாலும்….. மக்கள் தொகையில் சுமார் 6% மட்டுமே இருக்கிறார்கள்.

இங்கு மற்றோர் விஷயமும் பார்க்க வேண்டும். முன்பு ஒரு சமயம் அஜித் தோவல் பாகிஸ்தான் இனி இந்தியா மீது எந்த ஒரு தாக்குதல் சம்பவம் நடத்தினாலும் அவர்களுக்கு இனி பலூசிஸ்தான் பிராந்தியம் கிடையாது என சொல்லி இருந்தார். கூடவே அவர் பொறுப்பில் இருந்த காலத்தில் தான் காந்தகார் விமான கடத்தல் சம்பவம் நடந்தது. அந்த சமயத்தில் விடுவித்து கொண்டு சென்ற மஸூத் அஸார் என்பவனின் தம்பியை தான் நேற்று முன்தினம் நடந்த தாக்குதல் கொல்லப்பட்டு இறந்தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுபோலவே வேறோர் விஷயமும் உண்டு நம்மில் பலரும் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மக்களை இஸ்லாமியர் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். பாகிஸ்தானிய மத சிறுபான்மையினர். அதனாலேயே ஏராளமான தொல்லைகளை சந்தித்து வருகிறார்கள். நம் இந்திய ராணுவத்தினர் தாக்குதலை ஆவலோடு எதிர்பார்த்து வரவேற்பு தெரிவித்தவர்களில் முதன்மையானவர்கள் இவர்களே.

இவர்களில் பலர் ஒன்றுகூடி ஹிங்குலாஜ் மாதா கோவில் பஜனை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு விஷயம் நம்மில் பலருக்குமே தெரியாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஏனெனில் நம் இந்திய தேசத்தின் புகழ் கொண்ட 54 சக்தி பீடங்களில் இந்த கோவிலும் ஒன்று என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்…???

அது மாத்திரமல்ல.
இங்கு காவல் தெய்வமாக இருப்பது பீமலோசனர். அதாவது பைரவர்.

இஸ்லாமியர்கள் பலருமே வந்து வழிபாடு செய்து விட்டு போகும் இடம் தான் இது. அவர்களுக்கு இது பீபி நானி என்கிற பெயரில் அடையாளப் படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

கராச்சியில் இருந்து 245 கீலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த இடம்.

ஹிங்குலி என்பதற்கு சிந்தி மொழியில் முன் நெற்றி வகிட்டு குங்குமம் என்று அர்த்தம்.

என்ன ஏதேனும் பொருத்திப் போகிறதா……..?!?!

54 சக்தி பீடங்களில் பிரம்மராந்திரம் என்கிற உச்சந்தலை விழுந்த இடம் இது என்பதால் செந்தூரத்தாலேயே இங்கு உள்ள அம்மனுக்கு அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட நம்மூரில் காணப்படும் ஆஞ்சநேயர் போலவே எப்போதும் செந்தூரத்தில் மிக அழகாக காட்சி தருகிறாள் இந்த மஹா சக்தி கோடரீ……அதுவே அவளது பெயர்.

இந்த ஆப்ரேஷன் ஸிந்தூர் …. பெயர் தேர்ந்தெடுத்ததிலிருந்து திட்டமிட்டு மிக மிக நுணுக்கமாக… மிக மிக ஆழமான அவதானிப்புடன் ஒருவர் செயல்பட முடிகிறது என்றால்…… அவரால் முடியாததும் ஒன்று உண்டோ….

என்ன ஒன்று நம்மில் பலருக்கும் பின் தொடர்வதற்கே முடியாமல் போகிறது. என்ன செய்ய……

மிக நேர்த்தியான முறையில் துல்லியமாக வேலை நடக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது. ஆதலால் அது வேண்டாம் இது வேண்டாம் என எதனையும் தள்ளி வைத்து விட யோசிக்காதீர்கள். ஆழமான திட்டமிடல் இல்லாமல் இங்கு வேலைகளே இல்லை. அதனால் பாதகங்களை பற்றி பெரிய கவலை ஏதும் வேண்டாம். அது அத்தனைக்கும் வழி பார்த்து விட்டே செயலில் இறங்கி இருக்கிறார்கள்.
என்ன……. இந்த மாடல் ராஜாங்கத்தையே பார்த்து பார்த்து பழகியவர்களுக்கு இது சற்று புதிது. முற்றிலும் மாறுபட்டது.அதனால் ஆரம்ப கால பதற்றம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால்……
திடமாக நில்லுங்கள் அட்டகாசமான எதிர்காலம் நம் இந்திய தேசத்திற்கு வாய்த்திருக்கிறது. அது ஓர் புதிய பாரதமாய்….பாரதி கண்ட பாரதமாய் பன்முக தன்மையுடன் நிச்சயம் இருக்கும்.

பதிவு: 💗 ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

நன்றி : செய்திக்கதிர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button