அரசியல்இந்தியா

“ஆபரேஷன் சிந்தூர்” பெயர் வைத்தது யார் தெரியுமா..? – அமைச்சர் ராஜ்நாத் சிங்

குஜராத்தின் பூஜ்ஜில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

குஜராத் மே 16 2025:

குஜராத்தின் பூஜ்ஜில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, “1965ஆம் ஆண்டுக்கு பிறகு நமது வெற்றியை பாகிஸ்தான் கண்டுள்ளது என்றார்.

தொடர்ந்து உரையாடிய ராஜ்நாத் சிங், “’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றினீர்கள். 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றியை புஜ் கண்டது, இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றியைக் கண்டுள்ளது” என்றார்.
மேலும், “’ஆபரேஷன் சிந்தூர்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டார்” என்றார். தொடர்ந்து, “பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதத்தை ஒழிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே ஆனது என்றார்.

ஆபரேஷன் சிந்தூர்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்தத் தாக்குதலில் உள்ளூர் நபர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதற்கிடையில் ராஜ்நாத் சிங், சர்வதேச நாணய நிதியத்தின் மனிதாபிமான உதவியை பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button