சினிமா

பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: இயக்குனர் கோபி நயினார்

‘அறம்’ திரைப்படத்திற்காக கிடைத்த பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என்று இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அறம் என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் கோபி நயினாருக்கு பெரியார் விருதை வழங்கி மரியாதை செய்தது திராவிடர் கழகம். தற்போது அந்த விருதை திருப்பி வழங்கியிருக்கிறார் கோபி. இது குறித்து அவர் கூறியதாவது.. “தமிழ்நாட்டில் ஒரு தலித், ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை

அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் அதை நான் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்தரிக்கிறது; இது போன்ற காரணங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்”

என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button