தமிழகம்

சிறிய பங்களிப்பை குறைத்து மதிப்பிடாதீர்கள்: ராமர் சேது பாலம்  சொல்லும் வாழ்வியல் பாடம்!

ராமர் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சேது (பாலம்) அமைக்கும்போது, வானரங்கள் அனைத்தும் பெரிய பாறைகளைச் சுமந்து, சுக்கிரீவனின் அணியில் இருந்த இரு கட்டிட வல்லுநர்களான நளன் மற்றும் நீலனின் வழிகாட்டுதலின்படி அவற்றை அடுக்கின. மற்ற விலங்குகளும் பறவைகளும் தத்தம் வழியில் உதவி செய்தன. அவற்றில் ஒரு சின்ன அணிலும் இருந்தது.

அந்தச் சிறிய உயிரினத்தால் கற்களைத் தூக்க முடியாததால், அது ஒரு புதுமையான முறையைக் கண்டறிந்தது. தண்ணீரில் நனைந்து, மணலில் புரண்டு, அந்த மணலைத் தன் உடலில் ஒட்டிக்கொண்டு, பாலம் கட்டும் இடத்திற்கு ஓடிச் சென்று தன் உடலை அசைத்து மணலைக் கல்லின் மீது தூவியது. மணல் அளவு சிறிதுதான் என்றாலும், அந்த அணில் களைப்படையாமல், கொடிய வெயிலிலும் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்தது.

ராமர் எதையும் விடாமல் கவனித்தார்! அந்தச் சிறிய உயிரின் தியாகத்தைக் கண்டு மகிழ்ந்து, அன்புடன் அதைத் தன் கையில் தூக்கினார். பிறகு, தன் மூன்று விரல்களை அதன் முதுகில் வைத்து ஆசீர்வதித்தார். அதன் விளைவாக, அணிலின் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகள் உண்டாயின.

இந்த உலகில், நல்ல காரியத்திற்கான உதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும், கடவுள் அதைப் புறக்கணிப்பதில்லை. ஆகையால், உங்கள் சிறிய பங்களிப்பையும் தாழ்வாக மதிப்பிட வேண்டாம். உங்கள் நோக்கம் நேர்மையானது, உள்ளம் தூய்மையானது என்றால், அதுவே போதுமானது!

தகவல்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button