Uncategorizedதமிழகம்
திமுகவின் சட்ட போராட்டம் தொடரும் – மு க ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

“ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும்.
மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக திமுக தன் போராட்டத்தைத் தொடரும்”

“பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர்




