அரசியல்உலகம்

“சுதர்ஷனரை” ட்விட் போட்ட இஸ்ரேலின் மொசாட்…! விரைவில் சம்பவம்…?

இஸ்ரேலின் சக்திவாய்ந்த புலனாய்வு அமைப்பான மொஸாத் சுதர்ஷ்னர் படத்தை ட்வீட் போட்டுள்ளது பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.

புதுடெல்லி மே 6 2025 :

2020 இல் லடாக்கில் (பாரத – சீன எல்லையில்) இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியிருந்தார், “புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வழிபடுவதும் நாங்கள் தான், சுதர்ஷனரை ஏந்திய கிருஷ்ணரை வழிபட்டு பின்பற்றுபவர்களும் நாங்கள் தான்” என்று!

(We are the same people who pray to the flute playing Lord Krishna but we are also the same people who idolise and follow the same Lord Krishna who carries the ‘Sudarshana Chakra’: PM Modi in Ladakh)

அப்போது சீனாவுக்கு மெசேஜ் கொடுத்திருந்தார் பிரதமர் மோடி.  “நாங்கள் புல்லாங்குழல் ஏந்த வேண்டுமா அல்லது சுதர்ஷனரை ஏந்த வேண்டுமா என்பதை நீயே முடிவு செய்து கொள்” என்று.

இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று இஸ்ரேலின் மொஸாத் புலனாய்வு அமைப்பு சுதர்ஷனரை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் மொஸாத்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக… விரைவில் சம்பவம்..?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button