ஒரே வரியில் வாழ்த்தை முடித்துக்கொண்ட விஜய்.. தொலைபேசியில் பேசிய ரஜினி !

சென்னை: இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் .. ஆளுமைகள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்த்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்த நாளில் தங்களை வாழ்த்துகிறேன்” குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் படிங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து சொன்ன ஆளுநர் !
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் “முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



