சினிமா

இந்தியன் பாக்ஸ் ஆபீசை அலறவிட்ட 'புஷ்பா' சீரிஸ் அடுத்த பார்ட் ?

‘புஷ்பா 3’ எப்போது ஆரம்பமாகும்னு ரசிகர்கள் எல்லாரும் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. இதுக்கு தயாரிப்பாளர் ரவி பதில் சொல்லியிருக்காரு. ‘புஷ்பா 2’ படம் எவ்ளோ பெரிய வெற்றின்னு எல்லாருக்கும் தெரியும். இந்திய சினிமாவுலயே அதிக வசூல் வேற! கிட்டத்தட்ட 1,800 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணி சாதனை படைச்சிருச்சு. ஆனா, படத்தோட கதை இன்னும் முடியல. அதனால ‘புஷ்பா 3’ எப்போன்னு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சொல்றதைக் கேட்டா, அடுத்த இரண்டு வருஷம் அல்லு அர்ஜுன் வேற இரண்டு படங்கள்ல நடிக்கப் போறாராம். அட்லி படம், த்ரிவிக்ரம் படம்னு பிஸி ஆயிடுவாரு. அதே மாதிரி இயக்குநர் சுகுமார், ராம்சரண் கூட ஒரு படம் பண்ணப் போறாரு. இந்தப் படங்கள் எல்லாம் முடியறதுக்கு 2028 ஆகிரும்னு தோணுது. அதுக்கு அப்புறந்தான் ‘புஷ்பா 3’ பத்தி யோசிக்க முடியும்னு ரவி சொல்லியிருக்காரு.

சுகுமார் இயக்கத்துல அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிச்சு ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ ரெண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி. அடுத்த பாகம் எப்போன்னு ரசிகர்கள் ஆவலோட காத்துக்கிட்டு இருக்காங்க.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button