அரசியல்இந்தியா

இனி மைசூர் பாக். இல்ல… மைசூரு ஸ்ரீ…என்ன காரணம் ..?

ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்ற வார்த்தை மாற்றப்பட்டு மைசூரு ஸ்ரீ என புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பாக் (பாகிஸ்தான்) என்ற பெயரை வியாபாரிகள் கைவிட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர், மே 23 2025: 

ராஜஸ்தான் மாநிலத்தில் மைசூர் பாக்கில் (பாக்- பாகிஸ்தான் சுருக்கம்) என வருவதால் அந்தப் பெயரை மாற்ற வியாபாரிகள் முன்வந்துள்ளனர்.
அதாவது, மைசூர் பாக் என்பதற்கு பதிலாக மைசூரூ ஸ்ரீ எனப் புதிய பெயரை சூட்டியுள்ளனர். இது குறித்து ஜெய்ப்பூர் வைசாலி நகரில் உள்ள தியோகர் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் அஞ்சலி ஜெயின் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதனை கூறினார்.

இது குறித்து பேசிய அவர், “தேசபக்தி உணர்வு எல்லையில் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்திய வீட்டிலும் இதயத்திலும் இருக்க வேண்டும்” என்றார். மேலும் இதனை பல்வேறு கடைக்காரர்களும் வரவேற்றுள்ளனர். மேலும், பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருக்கு இது உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கியது.
இதில் 40 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button