பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் !

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார்.
1999 இல் தாஜ்மஹால் என்ற தமிழ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதி ராஜா. சமுத்திரம் (2001), கடல் பூக்கள் (2001), அல்லி அர்ஜுனா (2002), வருஷமெல்லாம் வசந்தம் (2002), ஈர நிலம் (2003), அன்னக்கொடி (2013) மற்றும் பேபி (2015) போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை, திடீர் மாரடைப்பு காரணமாக இரங்கலாக மாறியது.
மனோஜுக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து உடனடியாக அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்களின் முயற்சி பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மனோஜின் இறுதிச்சடங்குகள் அவரது குடும்பத்தினர் அறிவிக்கும் நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




