அரசியல்இந்தியாஉலகம்

“ஆப்ரேஷன் சிந்தூரில்” இந்திய போர் விமானம் வீழ்த்தப்பட்டதா..? (வீடியோ )…

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் ப்ளூம்பெர்க், இந்திய முப்படைகளின் தலைமை தளபதி  அனில் சௌஹானை நேர்காணல் கண்டிருக்கிறது சிங்கப்பூரில்.

கோலாலம்பூர் ஜூன் 1 2025:

கோலாலம்பூரில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளஹானை ப்ளூம்பெர்க் பத்திரிக்கையின் பெண் நிருபர் பேட்டி எடுத்தார்.

அப்போது அவரிடம் , “இந்திய விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதா?” என்று நிருபர்  கேட்க அவரும், “இதில் எது முக்கியம் என்றால், விமானம் வீழ்த்தப்பட்டதா இல்லையா என்பதில்லை. எதனால் அவை down (இயக்கப்படவில்லை? வீழ்த்தப்பட்டது?) ஆனது என்பதே.

நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்து, அதன் பிறகு மீண்டும் தாக்கினோம். அத்தனை விமானங்களையும் இயக்கினோம்.” என்று பதிலளித்திருக்கிறார். (வீடியோ கீழே உள்ளது.)

மீண்டும் ப்ளூம்பெர்க், “பாகிஸ்தான் 6 விமானங்களை வீழ்த்தியதாகச் சொல்கிறது” என்று கூற, அதற்கு சௌஹான், “முற்றிலும் தவறான தகவல்” என்கிறார்.

தலைமை தளபதி பேட்டி

அதை விளக்கி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷா (Harsha Kakar) தன் பதிவில், “இதை ஏன் விமான இழப்பு என்று அழைக்கிறோம்? சௌஹான் தெளிவாகச் சொல்கிறார், ‘நாங்கள் தாக்குதல்களை சந்தித்தோம் (We had hits), எங்கள் தந்திரோபாயங்களை சரிசெய்து மீண்டும் இரண்டு நாட்களில் அத்தனை விமானங்களையும் பறக்கவிட்டோம்’ என்கிறார். அதாவது, சில தாக்குதல்கள் ஏற்பட்டன, ஆனால் அவை அத்தனையும் அபாயகரமானவை அல்ல, வீழ்த்தப்படவில்லை.

தலைமை தளபதி சௌஹான் சொன்னதைத் தான் முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமானப்படை தளபதியும் சொன்னார். அலுவல் பாஷை (official communication) என்பது பல நுணுக்கங்களைக் கொண்டது.

‘எந்த விமானமும் வீழ்த்தப்படவில்லை’ என்பதும், ‘அனைத்து விமானங்களும் மீண்டும் பறந்தன’ என்பதும், ‘சில தாக்குதல்களை சந்தித்தோம்’ என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியதாகும்.

தலைமை தளபதி செளஹான் மத்திய அரசு அனுமதி இல்லாமல்  பேசியிருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் கூட்டத்தில் CDS பங்கெடுப்பது இதுவே முதல் முறை. எனவே… இதன் மூலம் மெசேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தலைமை தளபதி தன் பேச்சில், ‘பயங்கரவாதம் ஒடுக்கப்படும்’ என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

நன்றி : செய்திக்கதிர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button