தமிழகம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தை சேந்த 6 மீனவர்களை கைது செய்து இலங்கை அழைத்து சென்றனர்.

இதனை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button