
சென்னை: இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு பிரதமர் மோடியும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க.. ஏகே ஒரு ரெட் டிராகன்’.. இணையத்தை தெறிக்கவிடும் ‘குட் பேட் அக்லி’ டீசர்
ஆளுநர் ஆர்.என்.ரவி: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழில் கையெழுத்திட்டு தமிழிலேயே வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
இதையும் படிங்க.. தொடர் தோல்விகள்.. இங்கிலாந்து கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் ஜாஸ் பட்லர்
மேலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்த்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்த நாளில் தங்களை வாழ்த்துகிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.




