தமிழகம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது

17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் போக்சோ வழக்கில் கைது

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தப்பி ஓடிய நிலையில், சிறப்பு போலீஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

11 மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள அவரது வீட்டில் நடந்த விழாவின் போது இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கோவை போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து, அவரை இன்று கைது செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button