Uncategorizedசினிமாதமிழகம்

35 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத் தானே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்…!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடல், அவர் கட்டிய கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த மகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் கல்லறையில் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை ஜூன் 1 2025:

தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகரான ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45 ஆண்டுகளில் 150 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். திரைப்படங்களை தவிர்த்து சின்னத்திரையிலும் நடித்து வந்தார். யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். இந்த சூழலில் ராஜேஷ் (76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் 29 ஆம் தேதி காலமாகினார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அசோக் நகரில் இருந்து ராஜேஷ் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குத் தானே கல்லறையை வடிவமைத்திருந்தார் ராஜேஷ். அதில் தான் அவரது தந்தை, தாயின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

தாய், தந்தை, மனைவி ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே ராஜேஷ் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் தனக்காக கட்டிய கார்ல் மார்க்ஸ் கல்லறை பாணியில் கட்டப்பட்ட கல்லறையில் அவரது உடல் ரஷ்ய பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது

முன்பு ஒரு பேட்டியில் இந்த கல்லறை பற்றி கூறியிருந்தார் நடிகர் ராஜேஷ். “நான் 1988 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற போது கார்ல் மார்க்ஸ் கல்லறைக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அதைப் போலவே எனக்கும் ஒரு கல்லறையை எனது 40 வயதில் கட்டியிருக்கிறேன். இதற்கு முன்பு முதலில் மார்பளவு கட்டியிருந்தேன். அது இடிந்துவிட்டது. இப்போது கிரைனைட் கற்களில் கட்டி முடித்திருக்கிறேன்.

எனக்கு மார்க்ஸ் போன்று கல்லறையை கட்டவேண்டும் என என் மகள், மகனுக்கு எப்படி சொல்ல முடியும்? அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்குமோ இல்லையோ எனத் தெரியவில்லை. அதனால்தான் நானே பைபில் வசனம் உள்ளிட்ட நிறைய விஷயங்களை குறிப்பிட்டு எனக்கு நானே கல்லறை கட்டி முடித்துவிட்டேன். என் கல்லறையை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என நடிகர் ராஜேஷ் கூறி இருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button