
பெங்களூரு: பணி ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் தலைவலியை கிளப்பியுள்ளது.

வளர்ச்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க, சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் கொள்கைகளுக்கு நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம் என்று பாஜக கூறியிருக்கிறது.
கர்நாடகாவை பொறுத்தவரை கிராமப்புற மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி பணிகளுக்குகான ஒப்பந்தங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. கர்நாடக வெளிப்படைத்தன்மை பொது கொள்முதல் சட்டம், 1999 (KTPP சட்டம்) படி, இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதாவது இம்மாநிலத்தில் வளர்ச்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களில் SC/ST பிரிவினருக்கு 24.1% அளவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை (திருத்தம்) சட்டம், 2016ன்படி இதனை அப்போதைய முதல்வர் சித்தராமையா கொண்டு வந்தார். அதன்படி பட்டியலின சமூத்தினருக்கு 17.15% மற்றும் பழங்குடியின மக்களுக்கு 6.95% என இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ரூ.50 லட்சம் வரையிலான ஒப்பந்தங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஒப்பந்த தொகை உச்சவரம்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டது.
இதையும் படிங்க.. சம்மன் கிழிப்பு.. ஜாமீன் மறுப்பு – கோர்ட் அதிரடி !
இதனை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க இஸ்லாமிய வாங்கு வங்கிகள் முக்கிய காரணமாக இருந்தன. 2 இஸ்லாமிய எம்எல்ஏக்கள் காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருக்கின்றனர். சபாநாயகர் இஸ்லாமியராக இருக்கிறார். இருப்பினும் இஸ்லாமிய வாக்கு வங்கிக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த கோரிக்கையின் அடிப்படிடையில், வளர்ச்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க சித்தராமையா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கவும் திட்டமிடப்படடிருக்கிறது. ஆனால் பாஜக இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.
பாஜக எம்எல்ஏ பசனகொளடா பாட்டீல் யத்னல் கூறுகையில், “காங்கிரஸ் யோசித்திருக்கும் இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த அரசு அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதிலேயே காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு எதிராக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சண்டை செய்வோம்” என்று கூறியுள்ளார்




