Uncategorized

பாரதியார் பாடலுடன் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது…

கோவை அருகே உதகமண்டலத்தில் இன்று (ஏப்ரல் 25 2025) துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்

கோவை ஏப்ரல் 25 2025:

கோயம்புத்தூரை அடுத்த உதகமண்டலத்தில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப்ரல் 25 2025) தொடங்கியது. இந்த மாநாடு தமிழக கவர்னர் ஆர் என் ரவி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் ஊட்டி வந்தார். அவர் இந்த மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர் தொடர்பாக சில குழப்பங்கள் நீடிக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளித்த கவர்னர் மாளிகை, இந்த மாநாடு ஜனவரியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என தெரிவித்திருந்தது. அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு என்றும் தமிழக அரசுக்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையே எவ்வித சச்சரவும் இல்லை எனவும் விளக்கம் அளித்து இருந்தது.

இவ்வாறு குழப்பங்கள் இருப்பதால் தமிழக அரசு பல்கலைக்கழக வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

“துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது”

மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களின் வீடுகளுக்கு சென்று காவல் துறை மிரட்டியுள்ளது புகார் தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என வீடு தேடிச் சென்று காவல்துறை மிரட்டியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும்  ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

துணைவேந்தர்கள் மாநாட்டில் ஓங்கி ஒலித்த பாரதியார் பாடல்

ஊட்டியில் ஆளுநர் தலைமையில் துணை ஜனாதிபதி கலந்துக்கொண்டஸ துணைவேந்தர்கள் மாநாட்டில் பாரதியார் பாடல் ஒலிக்கப்பட்டது.

மாநாட்டில் தேசிய கீதம் தமிழ் வாழ்த்தை தொடர்ந்து பாரதியாரின் வைர வரிகளான ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ பாடல் ஒலித்தது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button