
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மே 3 2025

திமுகவின் தனித்துவம் இதுதான்!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின்,“நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்” என்று கூறினார்.
“தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்!” என்றும் அவர் கூறினார்.

அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி, அரசியல் நடத்தும் மத்திய பாஜக அரசுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம்.
எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும், மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் பொதுக்குழு:

ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் எனதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.




