அரசியல்இந்தியாஉலகம்

இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கட்டுக்கதை…!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயிற்சி முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள் உள்ளிட்ட பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா புதன்கிழமை துல்லிய தாக்குதல் நடத்தியது.

இஸ்லாமாபாத் மே 8 2025:

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் சிந்தூர்ஆபரேஷன்  நடவடிக்கையின் போது ரஃபேல் உட்பட ஐந்து இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இதற்கான ஆதாரங்களை கேட்டவுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஆதாரங்களை தராமல் சமூக ஊடகங்களே சாட்சி என மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.

CNN நேர்காணலின் போது, பாகிஸ்தானின் கூற்றை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, ஆசிஃப் இந்த வினோதமான பதிலை தெரிவித்துள்ளார்.

“இதெல்லாம் சமூக ஊடகங்களிலும், இந்திய சமூக ஊடகங்களிலும் தான், வெளிவந்தது பாகிஸ்தானின் சமூக ஊடகங்களில் அல்ல என்றும் ஜெட் விமானங்களின் சிதைவுகள் இந்தியாவின்  பக்கத்தில் விழுந்தன என்றும் அது இந்திய ஊடகங்கள் முழுவதும் பரவியுள்ளது,” என்றும் ஆதாரங்களை கேட்டு அழுத்தம் கொடுத்தபோது பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் பதிலளித்தார்.

இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, பாகிஸ்தான் சமூக ஊடக சேனல்கள் விபத்துக்குள்ளான விமானத்தின் பழைய மற்றும் தொடர்பில்லாத புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, அதை வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம் என்று பரப்ப முயற்சிப்பதாகத் தெரிவித்தது. அந்தப் படம் 2021 இல் நடந்த விபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று அது கூறியது.

“தற்போதைய சூழலில் பாகிஸ்தான் ஆதரவு நபர்களால்  பகிரப்படும் பழைய படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு   பழைய படத்தை சிந்தூர்ஆபரேஷனின் போது  பஹாவல்பூர் அருகேபாகிஸ்தான்  சுட்டு வீழ்த்தியதாகக் கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#PIBFactCheck: இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள மோகா மாவட்டத்தில் விபத்துக்குள்ளான IAF MiG-21 போர் விமானம் சம்பந்தப்பட்ட முந்தைய சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்டது,” என்று அது தனது  X வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button