மூழ்கிறதா மூன்றாம் உலகப்போர் ?- ஒரு சிறப்பு பார்வை

உலகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவும் நிலையில், சமீபத்திய உக்ரைன்-அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மூன்றாம் உலகப் போரைத் தூண்ட முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் எதிர்காலத்தைக் கணிப்பவர்கள் ஏற்கனவே எழுப்பியுள்ள மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்கள் எவை என்பதைப் பற்றி சிந்தித்து பாருங்கள்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிரிட்டனுக்குச் சென்று பிரதமர் உட்பட பல தலைவர்களைச் சந்தித்தார். ரஷ்யா நடத்திய 166 ட்ரோன் தாக்குதல்களில் 90ஐ இராணுவம் முறியடித்ததாகவும் கூறப்படுகிறது. 2022இல் தொடங்கிய இந்தப் போர் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் ஜெலென்ஸ்கியை அடுத்த மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு அழைத்து உக்ரைனுக்குத் தேவையான ஆதரவைப் பற்றி விவாதிக்க உள்ளது. ஐரோப்பா தனது பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும், உக்ரைனில் அமைதியை உறுதி செய்யத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளதால், அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு அளிக்கப்படும் ஆதரவால் ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. அணு ஆயுதப் போரால் உலகளாவிய உணவு விநியோகம் பாதிக்கப்படும், கதிர்வீச்சு அபாயமும் ஏற்படும். இருப்பினும், உலகில் சில பகுதிகள் அணு ஆயுதப் போரின் தாக்கத்திலிருந்து ஓரளவு பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
வடமேற்கு வேல்ஸில் உள்ள ஆங்கிலசி தீவு மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டிருப்பதால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேபோல், டிராம்லாந்து மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள கார்ன்வால் பகுதியும் ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாம். உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவும் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களாக இருக்கலாம்.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவைத் தவிர, பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள், இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவும் பாதுகாப்பான இடங்களாக இருக்க வாய்ப்புள்ளது. அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்கும் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் பாதுகாப்பான புகலிடங்களாக இருக்கலாம். மலைப்பிரதேசங்களும் அணுசக்தி முகாம்களும் இல்லாததால் தென் அமெரிக்காவில் உள்ள சிலி, உருகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளும் ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாம். உணவு ஏற்றுமதியாளர்களாக இருப்பதால் இந்த நாடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.




