'டைகர் கா ஹூக்கும்' - ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியது !

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘ஜெயிலர் 2’. இதன் அறிமுக ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு பிரம்மாண்ட பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் பல்வேறு நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இதன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகுகிறது. இதில் நடித்த அனைவருமே 2-ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில புதிய கதாபாத்திரங்களையும் இணைத்துள்ளார் நெல்சன்.
இதையும் படிங்க.. ’82 வயசாய்டுச்சுனு நினைக்காதீங்க.. இது ஆரம்பம்தான்’- சிம்பொனி முடித்து நாடு திரும்பினார் இளையராஜா
சென்னையை தொடர்ந்து கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள்.




