சினிமா

இது ஆரம்பம்தான்'- சிம்பொனி முடித்து நாடு திரும்பினார் இளையராஜா

சென்னை: “82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது ஆரம்பம்தான்” என்று சிம்பொனி அரங்கேற்றம் முடித்து திரும்பிய இளையராஜா தெரிவித்தார்.

இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார்.

இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், ஆங்​கிலம் உட்பட பல்​வேறு மொழிகளில் 1,000-க்​கும் மேற்​பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்​ளார். சிம்​பொனி இசை அமைக்க வேண்​டும் என்பது அவரது நீண்​ட​கால கனவாக இருந்​தது. ஒரே நேரத்​தில் பல்​வேறு இசைக்​கருவி​களை ஒன்​றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் இசை​தான் சிம்​பொனி. அதன் தொடக்​க​மாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்​பத்தை அவர் உரு​வாக்​கி​னார்.

இந்த நிலையில் லண்டன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் இளையராஜா. அவருக்கு விமான நிலையத்தில்உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். மேலும் பாஜக, விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது ஆரம்பம்தான்.. லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன்… சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். நம்மண்ணிலும் நடக்கும் அதுவரை காத்திருக்கவும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது இந்தியா – பிரதமர் வாழ்த்து !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button